என் பெயர் வீ .லெனின். நான் சேலம் வருவாய் அலகில் 1973 ல் தட்டச்சராகப் பணியில் சேர்ந்தேன். 2008ல் விழுப்புரம் வருவாய் அலகில் வட்டாட்சியராகப் பணிஓய்வு பெற்றேன். 


சங்கப்பணியில் நான் தளராது பணியாற்றியுள்ளேன். எனது 35 ஆண்டு வருவாய்ப்பணியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்சங்கம் மற்றும் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்சங்கத்தில் மாவட்டளவில் பலப் பொறுப்புகளில் பணியாற்றி பணியாளர்  நலனுக்குப்பாடுபட்டுள்ளேன்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்திலும் விழுப்புரம் மாவட்ட தலைவராக சிறப்புறப் பணியாற்றியுள்ளேன்.


1.10.2011ல் விழுப்புரத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு பணிநிறைவு வருவாய்த்துறை  அதிகாரிகள் சங்ககூட்டத்தில் நான் பொருளாளராக நியமிக்கப்பட்டேன்.


நமது சங்கத்தின் செயல்பாடுகள், அறிக்கைகள், செய்திகள் போன்றவற்றை உறுப்பினர்கள் உடனுக்குடன்  தெரிந்துக்கொள்ள  நமக்கென்று ஒரு Web Site அவசியம் என்பதால் அதனை உருவாக்கி செயல்படுத்த எனக்கு  மாநில தலைவரால் பொறுப்பு அளிக்கப்பட்டது.அதன்படி www.tarroasso.blogspot.com என்ற  web site உருவாக்கப்பட்டுள்ளது .

இது ஒரு புதிய முயற்சி என்பதால் இதில் உறுப்பினர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளும் அறிவுரைகளும் ஏற்கப்பட்டு பின்னால் உரியமாற்றம் செய்யப்படும்.

எனது E-Mail id "vlenin51@gmail.com".


மாவட்ட மையங்களில்  நடைப்பெறும்  செய்திகள் மற்றும் அறிக்கைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை  மாநிலமையம் மூலம் உடனுக்குடன் எனது ஈமெயில் -க்கு அனுப்பிவைத்தால்  அதனை  மாநிலத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களும் தெரிந்துக்கொள்ள websiteல் வெளியிடப்படும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் கிடைக்கப்பெற்றவுடன் District Office bearers கலத்தில் வெளியிடப்படும் .


எனது இந்த புதிய முயற்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கும் 



வே . லெனின் 
வட்டாசியர் ( ஓய்வு )
விழுப்புரம் 



கைபேசி – 9894560803